கோவில்பட்டி புதுரோட்டில் பள்ளிக்கூட வாசலில் மினி பஸ்சை நிறுத்தும் டிரைவர்கள்; நடவடிக்கை கோரி ஆசிரியர், ஆரிரியைகள் மறியல்
கோவில்பட்டி நகரில் புதுரோடு என்பது மிகவும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலை ரெயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தகூடியவை.
இந்த சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்து இருக்கும் சூழலில் டிவைடர் போட்டு சாலையை இரண்டு வழிப்பாதையாக மாற்றி இருக்கிரார்கள். கண்ட இடத்தில் சாலையில் திரும்பமுடியாது. அதற்கான இடத்தில் தான் திரும்ப வேண்டும
புதுரோட்டில்-கடலையூர் ரோடு சந்திப்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. புதுரோடு இறக்கத்தில் இருந்து கடலையூர் ரோட்டுக்கு இடதுபுறம் திரும்ப வேண்டும். அந்த வழியாக செல்லும் மினி பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தி தான் பயணிகளை ஏற்றுவார்கள்.
இது போல் எட்டயபுரம் சாலையில் இருந்து வரும் மினி பஸ்கள் கடலையூர் ரோடு- புதுரோடு சந்திப்பில் இடது புறம் நகராட்சி பள்ளிக்கூட வாசல் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதையும், இறக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்த சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் திணறும் நிலை உள்ளது.
பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் செக்கடி தெருவில் இருந்து கடலையூர் ரோடு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி இந்த பாதையில் தான் வருவார்கள்.
இதையெல்லாம் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதே கிடையாது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் நகராட்சி பள்ளிக்கூட வாசலில் மினி பஸ் டிரைவர்கள் போக்கை கண்டித்து, திட்டங்குளம் பகுதியில் இருந்து வந்த மினி பஸ்சை செல்லவிடாமல் வழிமறித்து ஆசிரியர், ஆசிரியைகள் மறியலில் ஈடுபட்டனர், தலைமை ஆசிரியர் சுப்பராயன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இது பற்றி அறிந்ததும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். இனிமேல் பள்ளிக்கூட வாசலில் மினி பஸ்சை நிறுத்தாமல் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும் என்று டிரைவருக்கு அறிவுரை கூறியதுடன் இனிமேல் இது போல் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்,.







