கண்மாய் பகுதியில் பனை விதைகளை கடம்பூர் ராஜூ நட்டு வைத்தார்
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் `மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வகையில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. நிர்வாகி பி.கே நாகராஜன் தலைமையில், இன்று நடைபெற்றது.
இதில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இலுப்பையூரணி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







