அம்பேத்கர் நினைவு நாள்; சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்ட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், நகர செயலார் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,

