• October 21, 2026

Month: February 2026

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸ் சோதனை : கஞ்சாவுடன் 2 பேர் சிக்கினர் 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மகராஜன் மற்றும் போலீசார் நேற்று (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு […]

சினிமா

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நிர்வாகிகள் விவரம் வருமாறு :- தலைவர்: ஆர்.கே.செல்வமணி  துணைத்தலைவர்கள்: பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார். பொதுச்செயலாளர்: ஆர்.வி.உதயகுமார் பொருளாளர்:பேரரசு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இணைச்செயலாளர்கள் : எஸ்.எழில், சரண், சுந்தர்.சி என்.ஏகம்பவாணன் ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி செயற்குழு உறுப்பினர்கள்: ஆர்.அரவிந்தராஜ், என்.லிங்குசாமி, மாதேஷ்,, மனோஜ்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் , சி.ரங்கநாதன்,எஸ்.ரவிமரியா ஷரவணன் சுப்பையா, ஏ.வெங்கடேஷ், வெங்கட்பிரபு, […]

செய்திகள்

கோர்ட்டில் டி.ஆர்.பாலுவிடம் 3 மணி நேரம் அண்ணாமலை குறுக்கு விசாரணை; 2 கப்பல்கள்

திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக  சென்னை  சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். […]

செய்திகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை; வைகோ நேரில் ஆஜராகி விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும். அந்த தீர்ப்பாயம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி விடுதலைப் புலிகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு […]

செய்திகள்

சிறுபான்மையினரின் கோரிக்கை மனுக்களை கனிமொழி  எம்.பி. பெற்றார்

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற வெல்லும் சிறுபான்மையினரின் உரிமை குரல் கலந்துரையாடல் நிகழ்ச்சி திமுக தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. திமுக தேர்தல் அறிக்கை குழுவினரான தி.மு.க. செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா,  முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  சி.மதன் பதவி ஏற்றார்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த  என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி.ஆக  நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக  நியமிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார்.   முன்னதாக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொரு பாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து புதிய சி.மதனை  வரவேற்றனர் புதிய […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய  3 டன் தக்காளி

 தருமபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துக்கு 3 டன் தக்காளி  ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தஇரும்பு தடுப்புகளை உடைத்து தூக்கி எறிந்து சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  லாரியை ஓட்டி வந்த தர்மபுரியை சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ்(வயது 32), கீளினர் கனகராஜ் […]

கோவில்பட்டி

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஒலியியல் விழிப்புணர்வு திட்டம் நிகழ்ச்சி 

 கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒலியியல் விழிப்புணர்வு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. துறைத் தலைவர்  சு.து.செல்வசுந்தரி  வாழ்த்துரை வழங்கினார்.  சிறப்பு விருந்தினராக ஆங்கிலத்துறையின்  முன்னாள் மாணவி, கா. தேன்மொழி, (பீ லேர்னிங் நிறுவனர்) கலந்து கொண்டார்.   மாணவர்களுக்கு ஆங்கில மொழி ஒலியியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில்  இணையவழி வழியாக ஒலியியல் கற்பிக்கும் பணி வாய்ப்பு குறித்து உ ரை நிகழ்த்தினார்.  தொடக்கத்தில் ஆங்கிலத்துறை  மூன்றாம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா 

கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா  நடைபெற்றது. அரிமா மாவட்ட ஆளுநர் ஷாஜகான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில் முதலாம் நிலை துணை ஆளுநர் வெற்றிச்செல்வன், இரண்டாம் நிலை துணையாளர் ஜான் சுபாஷ், கேபினட் செகரட்டரி சுப்பையா,கேபினட் ட்ரெசரர் பிரேம்குமார் மற்றும் இதர லயன்ஸ் சங்கங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு […]

கோவில்பட்டி

எட்டயபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். பின்னர் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை குறித்து பார்வையிட்டதுடன் பயனாளிகளுக்கு முகாமின் அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  வழங்கினார். நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு […]