கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா
கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை தின விழா நடைபெற்றது. அரிமா மாவட்ட ஆளுநர் ஷாஜகான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதலாம் நிலை துணை ஆளுநர் வெற்றிச்செல்வன், இரண்டாம் நிலை துணையாளர் ஜான் சுபாஷ், கேபினட் செகரட்டரி சுப்பையா,கேபினட் ட்ரெசரர் பிரேம்குமார் மற்றும் இதர லயன்ஸ் சங்கங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். வழக்கறிஞர் கார்மல் ஜென்சி எழுதிய மகளிர் குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் புத்தகத்தை மாவட்ட ஆளுநர் வெளியிட கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பட்டய தலைவர் சந்திரசேகர், விழா ஏற்பாட்டுத்தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர்கள் ஜெயஸ்ரீ, டாக்டர் சீனிவாசகம், ரகுபதி, லயன்ஸ் உறுப்பினர்கள் துரைராஜ், பாலமுருகன், வள்ளியம்மை ராமசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை டைனமிக் லயன்ஸ் சங்க தலைவர் காளிமுத்து, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் அழகர்சாமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை உறுப்பினர் ஷெர்லி ட்விங்கிள், கார்மல் ஜென்ஸி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் 2026-ம் ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட ஆளுநர் தேர்வுக்கான வேட்பாளர் பன்னீர் செல்வராஜ் கலந்து கொண்டார். பொருளாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.







