• October 21, 2026

எட்டயபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

 எட்டயபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

பின்னர் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை குறித்து பார்வையிட்டதுடன் பயனாளிகளுக்கு முகாமின் அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  வழங்கினார்.

நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சமுதாய நல செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *