தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு சி.மதன் டாக்டருக்கு படித்தவர்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் பிரண்டாக இருக்கும் சிலம்பரசன் சென்னை உதவி போலீஸ் ஐஜி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாநகர துணை கமிஷனராக இருக்கும் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டிருக்கிறார்
ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு -சித்ரா தம்பதியரின் மகன் ஆவார்.
31 வயதான சி.மதன் எம்.பி.பி.எஸ். படித்தத டாக்டர் ஆவார்.2021 ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் 195வது இடத்தைப் பிடித்தார்.

ஐபிஎஸ் பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகியவற்றை பெற்று பலரது பாராட்டுகளை பெற்றவர் சி.மதன்.
.ஐ பிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார்.பின்னர் தஞ்சாவூரில் 6 மாதங்கள் பணியாற்றினார்.
பின்னர்ஹைதராபாத்தில் 2 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்த மதன், தூத்துக்குடி நகர
பயிற்சி ஏ.எஸ்.பி.யாக மேகம் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்
இதனை தொடர்ந்து பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மேற்கு போலீஸ் துணை கமிஷனராக காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்று வந்தார்.
இந்த நிலையில், தூத்துக்
குடி மாவட்ட புதிய போலீஸ் புரண்டாக சி. மதன் நியமிக்கப்பட்டிருக்கிறார் விரைவில் அவர் பதவியேற்பார்.







