மத்திய கல்வி மந்திரியை பதவி நீக்கக்கோரி, கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
Oplus_16908288

நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணை தலைவர் அபிராமி முருகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மிகப்பெரும் கல்வி முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற பேரணியில் தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி நிர்வாகிகள் நல்லையா, மோகன், ஆவல்நத்தம் லட்சுமணன் பாலாஜி, சங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், ஐ.என்.டி..யு.சி. ராஜசேகரன், பழனிச்சாமி,

வழக்கறிஞர் மகேஷ் குமார், பகத்சிங் ரத்ததானக் கழகம் மா. காளிதாஸ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், காக்ரோச் ஜனதா பார்ட்டி ராதாகிருஷ்ணன் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி ஜெயபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.







