ஓ.பன்னீர்செல்வம் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்

ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் திரு.சீனி (எ) ராஜகோபால் தலைமையில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் .சின்னத்துரை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இன்று திமுகவில் இணைந்தனர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில்n தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்

இந்த நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்







