• March 6, 2026

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  சி.மதன் பதவி ஏற்றார்

 தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  சி.மதன் பதவி ஏற்றார்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த  என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி.ஆக  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக  நியமிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார்.  

முன்னதாக மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொரு பாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து புதிய சி.மதனை  வரவேற்றனர்

புதிய போலீஸ் சூப்பிரண்டாக  பதவி ஏற்று இருக்கும் சி.மதன்,  மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு -சித்ரா தம்பதியரின் மகன். 31 வயதான சி.மதன்  எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் ஆவார்.

2021 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் 195வது இடத்தைப் பிடித்தார்.

ஐபிஎஸ் பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகியவற்றை பெற்று பலரது பாராட்டுகளை பெற்றவர் சி.மதன். 

.ஐ பிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார்.பின்னர் தஞ்சாவூரில் 6 மாதங்கள் பணியாற்றினார். அதன்பிறகு மதன், தூத்துக்குடி நகர  பயிற்சி ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்

 இதனை தொடர்ந்து பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மேற்கு போலீஸ் துணை கமிஷனராக காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்ரி  வந்தார்.தற்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  பதவி ஏற்றுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *