கோவில்பட்டி அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய 3 டன் தக்காளி
Oplus_16908288
தருமபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துக்கு 3 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தஇரும்பு தடுப்புகளை உடைத்து தூக்கி எறிந்து சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியை ஓட்டி வந்த தர்மபுரியை சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ்(வயது 32), கீளினர் கனகராஜ் (31). இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சாலையில் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததால் 3 டன் தக்காளி சாலையில் கொட்டியது.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றினர். மேலும் சாலையில் கொட்டிக்கிடந்த தக்காளி சேகரிக்கப்பட்டது.







