சிறுபான்மையினரின் கோரிக்கை மனுக்களை கனிமொழி எம்.பி. பெற்றார்
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற வெல்லும் சிறுபான்மையினரின் உரிமை குரல் கலந்துரையாடல் நிகழ்ச்சி திமுக தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
திமுக தேர்தல் அறிக்கை குழுவினரான தி.மு.க. செய்தித்தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருத்துக்களை கேட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பலதரப்பு மக்கள், வணிகர்கள்,தொழில் முனைவோர்கள், விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (16/02/2026) சிறுபான்மையினரை சந்தித்து கருத்துக்களை கேட்டது. இதில் 23 பிரிவை சேர்ந்த சிறுபான்மையினர் கலந்து கொண்ட நிகழ்வில் தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இந்த கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிக்கையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என திமுக தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.







