தூத்துக்குடியில் போலீஸ் சோதனை : கஞ்சாவுடன் 2 பேர் சிக்கினர்
Oplus_16908288
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மகராஜன் மற்றும் போலீசார் நேற்று (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.







