• October 21, 2026

Month: February 2026

கோவில்பட்டி

இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்

கோவில்பட்டி ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் மைக்ரோபாய்ண்ட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங்  தலைமை தாங்கினார்.மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் ஆனந்தவேலு  முன்னிலை வகித்தார். ஒய்.எம்.சி.ஏ  செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் மோசஸ்  வரவேற்றார். இந்திய முன்னாள் கூடைப்பந்து வீரர் சார்லஸ் கிறிஸ்டோபர் , இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றினார். விடி வெள்ளி  கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 10 பேர் தேர்வு 

கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி   1974-1977  ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்,  அரவிந்த் கண் மருத்துவமனன ஆகியவை இணைந்து ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிறு அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றன. அதன்படி பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு அன்று (நேற்று )கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. மாணவர் சங்க தலைவர்  ஜெயராஜ் தலைமை […]

தூத்துக்குடி

சிறுவனை கடத்திய தம்பதி கைது; விரைவாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்  கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண் ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் அந்த  சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர்.  இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த சிறுவனின் தாய் கூச்சலிட்டார்.இருப்பினும் பிடிக்க முடியவில்லை. இதனால் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அப்பகுதியில் ரோந்து […]

செய்திகள்

திருச்சி மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.   நாம் தமிழர் கட்சியும் வேகம் காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற தலைப்பில், சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வாகனங்களில் சென்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பரிதாபம்: ஓடும் ரெயிலில் ஏறும்போது பயணி கீழே விழுந்து உயிரிழப்பு 

சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரகுமான் (வயது 52). கோவில்பட்டி வந்திருந்த இவர் இன்று  காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்துள்ளார். காலை 10 மணியளவில், குருவாயூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ‘குருவாயூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் 2-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது.  அப்போது, நடைமேடையின் எதிர்புறமாக இறங்கி தண்டவாளத்தை கடந்து ரெயிலில் ஏற முயன்ற ரகுமான், எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.  இந்த விபத்தில் ரெயில் […]

கோவில்பட்டி

விளாத்திகுளம் அருகே விபத்தில் பலியான 5 பேர் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம், வைப்பார் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு  கிழக்கு கடற்கரை சாலையில் டூரிஸ்ட் வேணும்,இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பல்லாகுளம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 55), முத்துலட்சுமி (48), சுமித்திரன்(3),முகில்(5) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகம்மாள் (60) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை அடுத்து  முதலமைச்சர்  lமு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தத்துடன் தலா ரூ 3 லட்சம் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி பக்கிள் ஓடையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் கட்டும் விரிவாக்க பணி ;

தூத்துக்குடி மாநகராட்சி, வி.வி.டி. ரோடு – பண்டுகரை சாலை சந்திப்பு (4ஆம் ரெயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தி தடுப்புசுவர் கட்டும் விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பிப்ரவரி 21 நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. இப்பணியைத் தொடங்கி வைத்தார்  விளையாட்டு திடல் திறப்பு தூத்துக்குடிமாநகராட்சிக்குட்பட்ட எழில்நகர் – எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில், நாடாளுமன்ற […]

செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1500 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா 23ஆம் தேதி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு புதிய திட்டப்ப ணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா வருகிற 23ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, ர திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை  திறந்து வைக்கிறார். 8 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா தொடக்கம் 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது .  தொடர்ந்து, வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்ட கொடிப்பட்டம், 9 சந்திகள் வழியாகக் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.05 மணிக்கு, கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக்கட்டிய கற்பக வீரக்குமார் […]

கோவில்பட்டி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணிக்கு துணைவேந்தர் பாராட்டு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி சென்னையில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  அணியின் வீரர்களுக்கு பார்ம் 3 சான்றிதழ் வழங்கப்பட்டது அணியின் தலைவர் அரவிந்தன்  வெற்றிக்கோப்பையை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலா வில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று நான்காவது இடம்பெற்று அடுத்து நடைபெறவுள்ள கேலோ […]