மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணிக்கு துணைவேந்தர் பாராட்டு
Oplus_16908288
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி சென்னையில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று விளையாடியது.
இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
அணியின் வீரர்களுக்கு பார்ம் 3 சான்றிதழ் வழங்கப்பட்டது அணியின் தலைவர் அரவிந்தன் வெற்றிக்கோப்பையை பெற்றுக் கொண்டார்

தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலா வில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் பங்கேற்று நான்காவது இடம்பெற்று அடுத்து நடைபெறவுள்ள கேலோ இந்தியா பல்கலைக்கழக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வீரர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
பாராட்டு விழாவில்பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் துரை மற்றும் உடற்கல்வி துறையின் இயக்குனர் முனைவர் ஆறுமுகம், ராணி அண்ணா மகளிர் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் அமர் நிஷா பல்கலைக்கழக ஆக்கி அணியின் மேலாளர் கடையநல்லூர் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குரு சித்ர சண்முக பாரதி, ஆக்கி பயிற்சியாளர் ஹானஸ்ட் ராஜா துணை பயிற்சியாளர் காளிமுத்து பாண்டிராஜா அணியின் மருத்துவர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.







