• March 6, 2026

சிறுவனை கடத்திய தம்பதி கைது; விரைவாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு 

 சிறுவனை கடத்திய தம்பதி கைது; விரைவாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு 

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்  கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண் ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர் அந்த  சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். 

இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த சிறுவனின் தாய் கூச்சலிட்டார்.இருப்பினும் பிடிக்க முடியவில்லை. இதனால் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ரேணுகா, தலைமை காவலர்கள் ராமச்சந்திரன்,  செந்தில்குமார், ஜெபக்குமார் ஆகியோர் விரைவாக செயல்பட்டு குலசேகரன்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள ஒரு கோவிலின் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட  சிறுவனுடன் சென்றுகொண்டிருந்த தம்பதியரை மடக்கி பிடித்து கடத்தப்பட்ட 2 ½ சிறுவனை பத்திரமாக மீட்டனர். 

மேலும் மேற்படி தம்பதியரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த லிங்கதுரை(வயது 35) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் சிறுவனை கடத்தியது ஏன் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

 சிறுவன் கடத்தப்பட்ட 30 நிமிடங்களில் விரைவாக் செயல்பட்டு சிறுவனை மீட்டதுடன், அவனை கடத்திய தம்பதியரை கைது செய்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன்  பாராட்டினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *