திருச்சி மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்; காரைக்குடியில் சீமான் போட்டி
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.
நாம் தமிழர் கட்சியும் வேகம் காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே போட்டியிடுகிறது.
இந்த நிலையில், திருச்சியில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற தலைப்பில், சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வாகனங்களில் சென்று திருச்சியில் குவிந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இவர்களில் 117 பேர் ஆண் வேட்பாளர்கள் 117 பேர் பெண் வேட்பாளர்கள். ஆண் பெண் இருவருக்கும் சம பங்கு என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு :
கோவில்பட்டி – பாண்டி (வக்கீல் )
ஓட்டப்பிடாரம் – அனுசியா ( ஆசிரியர் )
தூத்துக்குடி – இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்
திருச்செந்தூர் – ஒபிலியா
ஸ்ரீவைகுண்டம் – சண்முகசுந்தரம்
விளாத்திகுளம் – பாலாஜி (என்ஜினியர் )







