இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்
Oplus_16908288
கோவில்பட்டி ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் மைக்ரோபாய்ண்ட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினார்.மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார்.

ஒய்.எம்.சி.ஏ செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் மோசஸ் வரவேற்றார்.
இந்திய முன்னாள் கூடைப்பந்து வீரர் சார்லஸ் கிறிஸ்டோபர் , இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
விடி வெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா ஜாஸ்மின் மற்றும் கிரேஸ் பெண்கள் விடுதி கண்காணிப்பாளர் ஷைலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒய்.எம்.சி.ஏ செயலர் மேத்யூ நன்றி கூறினார்.







