தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 26-ந் தேதி நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக சப் ஜூனியர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆக்கி சாம்பியன் போட்டி- 2026 மாணவர்களுக்கான போட்டி ராமநாதபுரத்திலும் மாணவிகளுக்கான போட்டி சிவகங்கையில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது. சப் ஜூனியர் ஹாக்கி அணி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரு பிரிவினருக்கும் ஆன தேர்வு 26.2. 2026 (வியாழக்கிழமை) காலை 6:30 மணி அளவில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது

கலந்து கொள்ள விரும்பும் வீரர்களுக்கான தகுதி 1.1.2010 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் பயின்று வருபவராகவோ இருக்க வேண்டும்.
தேர்வுக்கு வரும் வீரர்கள் ஆதார் நகல் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9443190781, 7708901445.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா,மாவட்ட சப் ஜூனியர் அணியின் பயிற்சியாளர்கள் அஸ்வின் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்







