விளாத்திகுளம் அருகே விபத்தில் பலியான 5 பேர் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம், வைப்பார் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் டூரிஸ்ட் வேணும்,இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பல்லாகுளம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 55), முத்துலட்சுமி (48), சுமித்திரன்(3),முகில்(5) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகம்மாள் (60) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை அடுத்து முதலமைச்சர் lமு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தத்துடன் தலா ரூ 3 லட்சம் நிதி உதவி அறிவித்தார்.
இன்று அதற்கான காசோலையை பாலியானோர்குடும்பத்தினரிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் வழங்கி ஆறுதல் கூறினார். விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, ஊர் தலைவர் லிங்கம் முன்னாள் ஊர் தலைவர் உலகமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
.







