தூத்துக்குடி பக்கிள் ஓடையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் கட்டும் விரிவாக்க பணி ; கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாநகராட்சி, வி.வி.டி. ரோடு – பண்டுகரை சாலை சந்திப்பு (4ஆம் ரெயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தி தடுப்புசுவர் கட்டும் விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பிப்ரவரி 21 நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. இப்பணியைத் தொடங்கி வைத்தார்
விளையாட்டு திடல் திறப்பு

தூத்துக்குடிமாநகராட்சிக்குட்பட்ட எழில்நகர் – எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை, கனிமொழி எம். பி. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







