தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1500 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா 23ஆம் தேதி நடக்கிறது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு புதிய திட்டப்ப ணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா வருகிற 23ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, ர திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். 8 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் 5 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System) ஆகியவற்றுக்கு மந்திரி சார்பானந்தா அடிக்கல் நாட்டுகிறார்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.







