நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை மணிமதி, உதவித் தலைமை ஆசிரியை மெரின் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை இடைநிலை ஆசிரியர் அண்ணாதுரைப்பாண்டியன் தொகுத்து வழங்கினார். முடிவில், பட்டதாரி தமிழாசிரியை கெளசல்யா நன்றி கூறினார்.
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இன்று 13.1.2026 கதிரோன் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை குருலட்சுமி வரவேற்று பேசினார். நாடார்உறவின் முறைச்சங்கத்தின்தலைவர் ஆர். எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ். ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர்.சுரேஷ்குமார் பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ். எம்.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டனர். பள்ளியின் செயலாளர் ஏ. கண்ணன், பொருளாளர் பி. வள்ளுவன்,உறுப்பினர்கள் எல்.ரத்தினகுமார், ஜெ.சண்முகசுந்தரம், ஜி.ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள் சமத்துவ பொங்கலிட்டு நடனமாடி மகிழ்ந்தனர் விழாவின் போது […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூரியனை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சூரியனைப் பற்றிய குறிப்புகள் உள்ள சூரிய பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்துள்ளது. சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் , கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர்,மாவட்ட ஆட்சியர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தபால் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவம், ஒற்றுமை மற்றும் தை திருநாளாம் தமிழர் பண்பாட்டின் சிறப்பை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர்கள் ரவீந்திரன் மற்றும் அண்ணாமலைசாமி ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து மேற்கொண்டனர். கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பலூன் உடைத்தல், கருப்பு உடைத்தல், எலுமிச்சை (லெமன் ஸ்பூன்) போட்டி, கட்டுரை […]
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழா களை கட்டியது. கல்லூரியில் நடந்த பொங்கல் நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், உறுப்பினர்கள் அருண், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் மாட்டு வண்டியில் சென்று இளவட்டக்கல் தூக்கி அசத்தினர். மாணவிகள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கும்மியடித்து உரலில் மஞ்சள் இடித்து தானியங்களை சொளவில் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) சமத்துவப் பொங்கல்விழா கல்லூரிச்செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியாக 12.1.2026 அன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர், அலுவலர்கள் கல்லூரி வளாகத்தைச் சுத்தப்படுத்தி தூய்மைப் பணி மேற்கொண்டனர். 13.01.2026 இரண்டாம்நாள் நிகழ்ச்சியாகச் சமத்துவப் பொங்கல்விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி புது நெல்லரிசி, சர்க்கரையிட்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார். துறை வாரியாக மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கல் வைத்தனர். ஆட்டம் பாட்டம் […]
கோவில்பட்டி ஆசியாபாரம்ஸ் நிறுவனம், ரோட்டரி சங்கம் இணைந்து மும்மத விவசாயிகள் கலந்து பொங்கலிட்ட சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விநாயகா ரமேஷ், ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி பாரம்பரிய பயிர் உற்பத்தி நிறுவன வேளாண் ஊக்குவிப்பாளர் பாண்டியம்மாள், பெண் விவசாயிகள் பாத்திமா பானு,. மாதா. தெய்வானை ஆகியோர் சேர்ந்து பொங்கலிட்டு சமத்துவத்தை தெரிவித்தார்கள். இவ்விழாவில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன டைரக்டர் பாபு விழாவை தொடக்கி வைத்து வரவேற்றார். நிகழ்ச்சியை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது., இதனால் தங்கள் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 13) கிராம மக்கள் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் மின் கோபுரத்தில் […]
கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளி நாயகம் அறக்கட்டளை சார்பாக தைத்திருநாள் கொண்டாட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி தலைமைதாங்கினார். பஜ்ரங் நாட்டியப்பள்ளி நிறுவனர் கணபதி முன்னிலை வகித்தார். தொட்டிலோவன்பட்டி கணித ஆசிரியர் வேல்முருகன் வரவேற்று பேசினார். பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் முருகசரஸ்வதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, தைத்திருநாளை கொண்டாடுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்க நடுவராக நெல்லை சுப்பையா இருந்தார்.. கவிஞர்கள் […]







