மும்மத பெண் விவசாயிகளின் சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி ஆசியாபாரம்ஸ் நிறுவனம், ரோட்டரி சங்கம் இணைந்து மும்மத விவசாயிகள் கலந்து பொங்கலிட்ட சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விநாயகா ரமேஷ், ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி பாரம்பரிய பயிர் உற்பத்தி நிறுவன வேளாண் ஊக்குவிப்பாளர் பாண்டியம்மாள், பெண் விவசாயிகள் பாத்திமா பானு,. மாதா. தெய்வானை ஆகியோர் சேர்ந்து பொங்கலிட்டு சமத்துவத்தை தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன டைரக்டர் பாபு விழாவை தொடக்கி வைத்து வரவேற்றார். நிகழ்ச்சியை டைரக்டர் மெக்சிடா தொகுத்து வழங்கினார். டைரக்டர் பத்மா பாபு நன்றி கூறினார்.
விழாவில் ஆசியாபார்ம்ஸ் மற்றும் கோவில்பட்டி ஆசியாகேண்டி நிறுவன ஊழியர்கள், ரோட்டரி சங்க தலைவர்கள், உதவி ஆளுநர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் பனங்கிழங்கு வழங்கப்பட்டது.







