• October 22, 2026

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்க தடை    

 டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்க தடை    

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வில், இந்த 11 வகை மதுபானங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை சுவையூட்டிகள் (Artificial Flavors) சேர்க்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதனையடுத்தே இவற்றுக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் கண்டிப்பான உத்தரவுகள் வருமாறு,:-

*மறுஉத்தரவு வரும் வரை இந்த 11 வகை மதுபானங்களைச் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கக் கூடாது. 

*கிடங்குகளில் (Godown) இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கோ அல்லது FL2, FL3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் ஹோட்டல்களுக்கோ இவற்றை இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

*நுகர்வோருக்கு இவற்றை விற்பனை செய்யக் கூடாது 

இவ்வாறு மொத்தம் மற்றும் சில்லறை விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட 11 மதுபானங்களின் பட்டியல்:

VSOP EXSHAW GOLD BRANDY

LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY

Mc Dowells VSOP Brandy (Blended Brandy)

NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)

MENSCLUB Deluxe Brandy (Indian Brandy)

HONEY BEE FINE Brandy (Indian Brandy)

ENRICA VSOP SELECT BRANDY

ENRICA PLATINUM RESERVE XO BRANDY

ENRICA PREMIUM FRENCH BRANDY

VEERAN SPECIAL BRANDY

ENRICA OLD INDIE CLASSIC DARK RUM

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *