கோவில்பட்டி கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘டாலன்ட் ஷோ’ போட்டிகள்
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி யில் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘டாலன்ட் ஷோ–2026’ எனும் துறைகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது

மாணவர்களின் மொழித்திறன், படைப்பாற்றல் மற்றும் நாட்டுப்பற்று உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கவிதை ஒப்பித்தல், வாசிப்பு மற்றும் புத்தக விமர்சனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நிகழ்விற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், முதல்வர் பொறுப்பு பாண்டியராணி, ஆங்கிலத் துறைத் தலைவர் சரவண செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து குடியரசுத் தினத்தின் முக்கியத்துவம், இந்திய அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் மாணவர்களின் சமூகப் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
முடிவில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி அபிநயா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர்கள் காயத்ரி, வித்யா லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.







