கோவில்பட்டி கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
Oplus_16908288
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் புதுமை கழகம் சார்பாக ஒருநாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி “எதிர்காலத்தில் கல்வித்துறை அதன் சிறப்பு மற்றும் புதுமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

வணிகவியல் துறைத்தலைவர். ஜெ.ஆனந்த் வரவேற்று பேசினார். கல்லூரி இயக்குநர். பா.மகேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினராக, சென்னை, சத்தியபாமா பல்கலைக்கழகம் செல் உயிரியல் துறைத்தலைவர். ஜான்சன் ரெட்னராஜ் சாமுவேல், அறிவுசார் சொத்துரிமைகள், காப்புரிமை தாக்கல் மற்றும் அதன் மூலம் நிதியுதவி பெறுதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி, வணிகவியல் துறை, உதவிப்பேராசிரியர். டி.எஸ்.சுப்புலட்சுமி, செயற்கை நுண்ணறிவு மூலம் வலுப்பெறும் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சியை மாற்றியமைத்தல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வியல் நிறைஞர்கள் மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் எம்.வைரவன் நன்றி கூறினார்.







