கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நடும் பணி
Oplus_16908288
கோவில்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.

வட்ட சட்டப்பணிக்குழு தலைவர் மாரிகாளை தலைமை தாங்கி, மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் எண் 1 ஆனந்த்,நீதித்துறை நடுவர் எண் 2 மணிமேகலை, காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், அரசு வழக்கறிஞர் சங்கர் கணேஷ்,வழக்கறிஞர் சங்கச்செயலாளர் சங்கர் ஆகியோர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், முத்துசாமி, முத்துக்குமார்,விஜய் சொர்ணமுத்து மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்







