எஸ். எஸ். டி. எம்.கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா
Oplus_16908288
இந்திய நூலகவியலின் தந்தை என்று போற்றப்படும் எஸ். ஆர். அரங்கநாதன் 134வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையிலும், நூலகர்களின் சேவைகளைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, கோவில்பட்டி எஸ்.எஸ். டி. எம். கல்லூரி நூலக துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மூன்றாம் ஆண்டு மாணவி மரிய அனுசியா வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் கே. கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.செல்வராஜ்மற்றும் மாணவ, மாணவிகள் எஸ். ஆர். அரங்கநாதன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
ஆங்கிலத்துறை பேராசிரியர் கற்குவேல் ராஜ் சிறப்புரையாற்றி, வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கல்லூரி நூலகர் செண்பகதேவி வாசகர் மன்ற அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

தேசிய நூலகர் தினத்தையொட்டி நடைபெற்ற கவிதை மற்றும் புத்தகக்குறியீட்டு வடிவமைப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி முனீஸ்வரி நன்றி கூறினார்.
நூலக துறை தலைவர்
செண்பகதேவி, வாசகர் மன்ற ஒருங்கிணைப்பார்களான ஆங்கிலத்துறை பேராசிரியர் திவ்யா மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்வமாதா ஆகியோர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்







