• October 22, 2026

கோவில்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் 

 கோவில்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் 

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ், வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிறிஸ்டோபர்  முன்னிலை வைத்தார். வணிகவியல் துறை பேராசிரியர் ஸ்ரீ ராம ஜெயா அனைவரையும் வரவேற்றார்.

 தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குரு வெங்கடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் பற்றியும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவு பற்றியும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

 கருத்தரங்கத்தில் மற்றொரு சிறப்பு விருந்தினர் சைபர் குற்ற பிரிவு காவல்  உதவி ஆய்வாளர்  முத்துக்குமார் கலந்து கொண்டு நாட்டில் நடக்கக்கூடிய பல்வேறு விதமான சைபர் குற்றங்கள் பற்றியும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவரும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி  எடுத்து கொண்டனர்.

முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் கோகிலா நன்றி கூறினார். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். கருத்தரங்கத்திற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சுசிலா, ஜெய்சிங் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *