கோவில்பட்டி லெனின் நகர் முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா
Oplus_16908288
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீரகருப்பசாமி திருக்கோவிலின் 49-வது ஆண்டு ஆடி கொடை விழா விமரிசையாக நடந்து வருகிறது.

கடந்த 4-ம் தேதி நாட்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து, 9-ஆம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் 10- ஆம் தேதி வடக்கத்தி அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. மங்கள விநாயகர் கோயில் முன்பிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், மந்தித்தோப்பு ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், பிற்பகலில் அன்னதானம் நடந்தது.

நாளை புதள்கிழமை காலை பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும், மாலையில் மஞ்சள்நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.







