போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி

கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரி, டைனமிக் லயன்ஸ் கிளப் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, போதை பழக்கத்திற்கு எதிராக, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்ட மனித சங்கிலி இயக்கம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து மனித சங்கிலியை துவக்கி வைத்தார். மனித சங்கிலியில் கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், இயக்குனர் மகேஷ் குமார், முதல்வர் பாண்டிராணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், லயன்ஸ் கிளப் சார்பாக மாவட்ட ஆளுநர் வெற்றி செல்வன், இரண்டாம் நிலை துணை ஆளுநர். பன்னீர் செல்வராஜ், கோவில்பட்டி தலைவர் ரூத் ரத்தினகுமாரி, செயலாளர் வள்ளியம்மை,மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க தமிழரசன் நிர்வாகிகள் வழக்கறிஞர் ரவிக்குமார், ராஜசேகரன், துரைராஜ், ராஜாராம், பழனிச்சாமி, செண்பகராஜ், கமல் ரமேஷ்,. ராதாகிருஷ்ணன், வினோபா, மாரிமுத்து குமார், ஜெகன், பாலாஜி, எழுத்தாளர் சுரேஷ்குமார், பூலோகபாண்டியன், நாஞ்சில் குமார், தேவராஜன், ஜெயா ஜனார்த்தனன், மேரி ஷீலா, ராமலெட்சுமி உட்பட கலந்து. கொண்டனர் ,

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் தொழில் நெறி கணக்கியல், வணிகவியல் துறை தலைவர் . மாரியப்பன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் செய்து இருந்தனர்,







