கோவில்பட்டியில் போதைப்பொருள்தடுப்பு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி
Oplus_16908288


80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த ஸ்கேட்டிங் பேரணி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானம் அருகில் இருந்து தொடங்கி எட்டயபுரம் ரோடு வழியாக கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் வரை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக காவல்துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
இயற்கை & யோகா அரசு மருத்துவர் திருமுருகன், காமராஜ் பள்ளி முதல்வர் பிரபு, பல் மருத்துவர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மாநில ஆலோசகர் சண்முகவேல் விளக்க உரை நிகழ்த்தினார்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு ஸ்கேட்டிங் பேரணியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் செய்திருந்தார்







