கோவில்பட்டியில் சுதந்திர தின கொண்டாட்டம்
Oplus_16908288
கோவில்பட்டியில் இன்று (15-ந்தேதி ) பல்வேறு தரப்பபினர் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி சுகாதார மாவட்டம் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின்படிசுதந்திர தின விழா கொண்டாட்டம் டாக்டர் நா.யஷ்வந்த்குமார் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

மேலும் ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் .சக்திரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் த.சரவணன்
பகுதி சுகாதார செவிலியர் வள்ளியம்மாள்மற்றும் செவிலியர்கள் சித்தமருந்தாளுனர் அனைத்து மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நகராட்சி தொடக்க பள்ளி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநயாகா ரமேஷ், முன்னாள் துணை ஆளுநர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி தேசிய கொடி ஏற்றினார்
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு கலை இலக்கிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தாமோதர கண்ணன், ராஜ்குமார்,சீனிவாசன், சரவணன்,மாரியப்பன்,மணிகண்டன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெங்கடேஸ்வரா கார்டன்

கோவில்பட்டி அப்பனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இங்குள்ள பூங்கா அருகில் உள்ள கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது நிகழ்ச்சியில் இந்த பகுதி மக்கள் கலந்து கொண்டனர்







