போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஒழித்திட அரசுக்கு துணை நிற்போம்… நர்சிங் கல்லூரி மாணவிகள் உறுதியேற்பு
Oplus_16908288
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களோடு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்தார்.
அதனை தொடர்ந்து கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.

நர்சிங் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் 80வது சுதந்திர தின விழாவில் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்,நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்,மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன்,போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன்,போதைப் பொருட்களின் உற்பத்தி,நுகர்வு,பயன்பாடு,ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்,மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்து செல்வம். முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார், தாமோதரக் கண்ணன், பிரபாகரன்,நடராஜன்,கல்லூரி ஆசிரியர்கள் சென்மதி, பூபதி, மகேஸ்வரி, பாண்டீஸ் வரி உள்பட மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முடிவில் கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்தேவி நன்றி கூறினார்







