கோவில்பட்டியில் பள்ளி மாணவர் ஆக்கி: 2-வது அரை இறுதி போட்டி நாளை நடக்கிறது
Oplus_16908288
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன
கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

லீக் சுற்றில் கடைசி இரு போட்டிகள் நேற்று 14 8 26 நடைபெற்றது.காலை 7 மணி அளவில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணியினரை வீழ்த்தினர்
கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணியினர் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதான் மூலம் அரை இறுதி போட்டிக்கு நாடார் மேல்நிலை பள்ளி ரெட் அணி,
செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா , கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இதை தொடர்ந்து முதலாவது அரை இறுதி போட்டி இன்று 15 8 26 மாலை நடைபெற்றது. கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் அணியினரும் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினரும் நாளை ஞாயிற்றுக்கிழமை 16.08.26 காலை 7 மணி அளவில் நடைபெறும்.

இறுதிப்போட்டி அடுத்த ஞாயிற்றுக்கிழமை 23 8 2026 காலை 7 மணி அளவில் நடைபெறும். போட்டி முடிவில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கி வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.
போட்டிக்கான ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, தூத்துக்குடி மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் திருச்செல்வம், நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்







