கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) சமத்துவப் பொங்கல்விழா கல்லூரிச்செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியாக 12.1.2026 அன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர், அலுவலர்கள் கல்லூரி வளாகத்தைச் சுத்தப்படுத்தி தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

13.01.2026 இரண்டாம்நாள் நிகழ்ச்சியாகச் சமத்துவப் பொங்கல்விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி புது நெல்லரிசி, சர்க்கரையிட்டு பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார்.
துறை வாரியாக மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கல் வைத்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் கும்மி அடித்து சமத்துவப் பொங்கல் விழாவில் தங்களின் மகிழ்ச்சியினை மாணவ, மாணவியர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இவ்விழாவில் இரண்டாமாண்டு இயற்பியல் துறை மாணவிகள் மு.ஐஸ்வர்யா, பெ.தீபிகாலட்சுமி ஆகிய இருவரும் இறை வணக்கம் பாடினர்., மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி சீ.கார்த்தீஸ்வரி வரவேற்று பேசினார். முதுகலை முதலாமாண்டு கணிதவியல் மாணவி கி.சண்முகப்ரியா நன்றி கூறினார்.
. சமத்துவப் பொங்கலை முன்னிட்டு மாணவிகளுக்கு நடைபெற்ற கயிறு இழுத்தல், தட்டாங்கல், கோலப்போட்டிகளிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற பச்சக்குதிரை, கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளிலும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் கி.ரேணுகாதேவி, பேராசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.







