காமநாயக்கன்பட் டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா
Oplus_16908288
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும்.
தேம் பாவனி எழுதிய வீரமாமு னிவர் இந்த பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

புனித பரலோக மாதா பேரால யத்தில் ஒவ்வொரு ஆண் டும் நடைபெறும் விண் ணேற்பு பெருவிழா சிறப்பு பெற்றதாகும்.இந்தாண்டுக்கான விண் ணேற்பு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மறையுரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடை பெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை வழங்கி திருப்பலி நிறை வேற்றினர்.வான
வேடிக்கை முழங்க மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட ஆரோக்கிய மாதா மற்றும் பரலோக மாதா சொரூபங்கள் தாங் கிய தேர் பவனி இன்று (15-ந்தேதி ) அதிகாலை தொடங்கியது.
தமிழகம் மட்டு மின்றி பல்வேறு மாநிலங் களில் இருந்தும் பல்லாயி ரக்கணக்கான
மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

விண்ணேற்பு பெருவி ழாவை முன்னிட்டு சென்னை, மதுரை, தூத் துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், ராஜபாளை யம், சிவகாசி, விருதுநகர், கயத்தாறு மற்றும் கோவில் பட்டி ஆகிய ஊர்களிலி ருந்து சிறப்பு பேருந்துக ளும் இயக்கப்பட்டன. கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி வட்டார இறைமக்கள், பேராலயப் பங்குத்தந்தை மோயீசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை மரியஜோ ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
தேருக்கு பின் ஏராள மான மக்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்க டன் செலுத்தினர். திருத்தேர்கள் மீது மக்கள் பூக்களை வாரி எறிந்தனர். பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.







