காமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை மணிமதி, உதவித் தலைமை ஆசிரியை மெரின் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

முதுகலை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை இடைநிலை ஆசிரியர் அண்ணாதுரைப்பாண்டியன் தொகுத்து வழங்கினார். முடிவில், பட்டதாரி தமிழாசிரியை கெளசல்யா நன்றி கூறினார்.







