கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் குலேசன் பள்ளியில் கதிரோன் திருவிழா
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இன்று 13.1.2026 கதிரோன் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை குருலட்சுமி வரவேற்று பேசினார்.
நாடார்உறவின் முறைச்சங்கத்தின்தலைவர் ஆர். எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ். ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர்.சுரேஷ்குமார் பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ். எம்.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டனர்.

பள்ளியின் செயலாளர் ஏ. கண்ணன், பொருளாளர் பி. வள்ளுவன்,உறுப்பினர்கள் எல்.ரத்தினகுமார், ஜெ.சண்முகசுந்தரம், ஜி.ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் சமத்துவ பொங்கலிட்டு நடனமாடி மகிழ்ந்தனர்
விழாவின் போது எல். கே. ஜி.முதல் 9 -ம் வகுப்பு வரை நம் பள்ளியிலேயே படித்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

,2024 – 2025ம் ஆண்டில் எல். கே. ஜி.முதல் 9 -ம் வகுப்பு வரை முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங் கப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் 100 சதவீத வருகை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசும். மேலும் 2024- 2025 ம் ஆண்டில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை ஒவ்வொரு பாடத்திலும் 100/ 100 மதிப்பெண்கள் பெறச் செய்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன..
பள்ளியின் முதல்வர் ஆர். ஜோதிலட்சுமி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அனைத்து ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள் வழங்கப்பட்டன. 10ம் வகுப்பு மாணவி கே.சத்யா நன்றி கூறினார்.







