முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அரசு பள்ளி மாணவிகள்
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது.
தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூரியனை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சூரியனைப் பற்றிய குறிப்புகள் உள்ள சூரிய பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்துள்ளது.

சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் , கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர்,மாவட்ட ஆட்சியர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்துமுருகன், திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயற்பியல் ஆசிரியை கமலாராணி அனைவரையும் வரவேற்றார். சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை தமிழக முதலமைச்சர் உள்பட உறவினர்கள்,நண்பர்களுக்கு, பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு வைத்திருந்த தபால் பெட்டியில் ஒவ்வொருவராக் போட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சுஜா,அகிலாராணி தபால் துறை அலுவலர் பெருமாள் சாமி உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியை கிரேனா நன்றி கூறினார்.







