கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவம், ஒற்றுமை மற்றும் தை திருநாளாம் தமிழர் பண்பாட்டின் சிறப்பை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில், கல்லூரி முதல்வர்கள் ரவீந்திரன் மற்றும் அண்ணாமலைசாமி ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து மேற்கொண்டனர்.

கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பலூன் உடைத்தல், கருப்பு உடைத்தல், எலுமிச்சை (லெமன் ஸ்பூன்) போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட அறிவாற்றல் போட்டிகளும், உறியடித்தல், செங்கல் தூக்குதல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடனம், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது விழாவின் சிறப்பு அம்சமாக கல்லூரி வளாகத்தைச் சுற்றி மாணவ, மாணவிகள் டிராக்டரில் ஊர்வலமாகச் வந்து சமத்துவம் மற்றும் தமிழர் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.…







