கோவில்பட்டியில் தைத்திருநாள் கவியரங்கம்
கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளி நாயகம் அறக்கட்டளை சார்பாக தைத்திருநாள் கொண்டாட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி தலைமைதாங்கினார். பஜ்ரங் நாட்டியப்பள்ளி நிறுவனர் கணபதி முன்னிலை வகித்தார். தொட்டிலோவன்பட்டி கணித ஆசிரியர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் முருகசரஸ்வதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து, தைத்திருநாளை கொண்டாடுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்க நடுவராக நெல்லை சுப்பையா இருந்தார்.. கவிஞர்கள் திருநாவுக்கரசு,
வேல்முருகன்,முருகானந்த்,ராதா, பவானி ஆகியோர் கவியரங்கில் உரையாற்றினார்கள். முடிவில் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.







