கோவில்பட்டி அருகே சாத்தூர் சாலையில் அமைந்துள்ள M.M வித்யாசரம் பள்ளிக்கூட வேன் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக நாலாட்டின் புத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்து. வேனை கருப்பசாமி என்பவர் ஒட்டி வந்தார். உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ம்வகுப்பு மற்றும் 2ம்வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் இருந்தனர். பள்ளி வேன் கோவில்பட்டியை கடந்து நேஷனல் கல்லூரி அருகே கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் திடீரென சாலையை தாண்டி அதி வேகமாக வந்து பள்ளிக்கூட […]
தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் மகன் அருண் (வயது 18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வந்தார்.. இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் கவின் 14, சண்முக சேகர் மகன் ஹரிஷ் 17 ஆகிய 3பேரும் நேற்று மாலை 5.30 மணி அளவில் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் […]
கோவில்பட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த 35 வயது நபர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கூறி அவருடைய குடும்பத்திற்கு, பெண் போலீஸ் ஒருவர் மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருந்ததாவது:- எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவில் பெண் போலீஸ்காரர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து மாற்றுப்பணியாக சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே […]
சர்வதேச ஆக்கி சங்கத்துடன் இணைந்து இந்திய ஆக்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக இந்தியாவில் நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆக்கி இந்தியா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி அணி மற்றும் முன்னாள் ஒலிம்பிக் ஆக்கி வீரர்கள் ஒரு அணியாகவும் சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெற உள்ளது. சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கின்ற ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியின் கோப்பை சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது நவம்பர் […]
பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய அணி தங்கம் வென்றது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அணியின் கேப்டன் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கபடியில் சிறந்து விளங்கும் கார்த்திகாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். கார்த்திகாவை நேரில் அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். ‘பைசன்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவை நேரில் சந்தித்து […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார், நேற்று மந்திதோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திரா காலனியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் வாள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் என்ற சிவா (25) என்பதும், முன் விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.. […]
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஏலக்கூடத்தில் மீனவர்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர். சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் […]
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் ; உப்பு ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- தென் மாவட்டங்களில் தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் இருந்தும் அதிக அளவில் வர்த்தக […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். புதிய பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டினார்கள் நிகழ்ச்சி நிறைவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவேந்திரா நன்றி […]
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பார் கவுன்சில் உறுப்பினர்கள் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, தாழைமுத்தரசு மற்றும் சிவசூரிய நாராயணன் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையர் சிவக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்க தலைவராக சங்கர்கணேஷ் பதவி ஏற்றார். கடந்த ஆண்டும் தலைவராக இருந்த இவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். சங்க செயலாளராக சங்கர், […]







