தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், ஏலக்கூடத்தில் மீனவர்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர்.

சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் ரூ.400, விளை மீன் ரூ.550 முதல் 650 வரையும், ஊளி மீன் ரூ.500 முதல் 550 வரையும், சூரை மீன் ரூ.200, கடவு இறால் ரூ.500-க்கும், சூப்பர் நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரையும், ஐலேஷ் கிலோ ரூ.200 வரையும், நகரை ரூ.250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.







