கோவில்பட்டி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார், நேற்று மந்திதோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்திரா காலனியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் வாள் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் என்ற சிவா (25) என்பதும், முன் விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.







