ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு 100 பவுன் தங்கம்; ரூ. 1 லட்சம் பரிசளித்த மன்சூர் அலி கான் அறிவிப்பு
பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய அணி தங்கம் வென்றது.
இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அணியின் கேப்டன் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கபடியில் சிறந்து விளங்கும் கார்த்திகாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கார்த்திகாவை நேரில் அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். ‘பைசன்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவை நேரில் சந்தித்து ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை கொடுத்தார்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 பவுன் தங்கம் பரிசாக வழங்குவதாகவும் மன்சூர் அலிகான் உறுதியளித்துள்ளார்.
கார்த்திகாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஊக்கத்தொகையும் வீடும் வழங்க வேண்டும் என மன்சூர் அலிகானை வலியுறுத்தி இருக்கிறார்.







