இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1000 ஆக்கிப்போட்டிகள்; கோவில்பட்டி யில் ஆலோசனை கூட்டம்
சர்வதேச ஆக்கி சங்கத்துடன் இணைந்து இந்திய ஆக்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக இந்தியாவில் நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆக்கி இந்தியா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி அணி மற்றும் முன்னாள் ஒலிம்பிக் ஆக்கி வீரர்கள் ஒரு அணியாகவும் சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெற உள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் நடைபெற இருக்கின்ற ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியின் கோப்பை சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது நவம்பர் 7ஆம் தேதி இந்தியா முழுவதும் 500 மாவட்டங்களில் 1000 ஆக்கி போட்டிகள் நடத்தி கின்னஸ் சாதனை நிகழ்த்த உள்ளார்கள்.

அந்த கின்னஸ் சாதனையில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். அதன் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், சிவானந்த், வேல்முருகன் , முகேஸ்வரி, ஹாக்கி வீரர்கள் மனோஜ் குமார், மாயாண்டி, சண்முகப்பிரியா, ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* நவம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிப்போட்டிகள் நடத்துவது.
* உலகக்கோப்பை போட்டியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக உலகக்கோப்பை சுற்றுப்பயணம் நமது கோவில்பட்டியில் நவம்பர் 13ஆம் தேதி காலை 9 மணி அளவில் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

* கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் இந்திய ஆக்கி வீரர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், அஸ்வின், மாரீஸ்வரன்ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்
* பள்ளி மற்றும் கல்லூரிகளில் உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, சிறுவர்களுக்கான ஆக்கி போட்டி கள் நடத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
* தென் தமிழகத்தின் தலைநகரமான மதுரையில் நடைபெறும் முதல் சர்வதேச உலகக் கோப்பை போட்டியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் பார்ப்பதற்கு அனுமதி இலவசம் மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்
மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.







