கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பார் கவுன்சில் உறுப்பினர்கள் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, தாழைமுத்தரசு மற்றும் சிவசூரிய நாராயணன் கலந்து கொண்டனர்.
தேர்தல் ஆணையர் சிவக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்க தலைவராக சங்கர்கணேஷ் பதவி ஏற்றார். கடந்த ஆண்டும் தலைவராக இருந்த இவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார்.

சங்க செயலாளராக சங்கர், பொருளாளராக கோபி, துணை தலைவராக சிவனுபாண்டி, இணை செயலாளராக சக்திவேல் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சேர்மத்துரை, கார்த்திக், ராசுக்குட்டி, கருப்பசாமி, கார்த்திக் மாறன் மற்றும் நூலகராக பாலகுருசாமி, துணை நூலகராக அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.







