ரெயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்தபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; 2 பேர் காயம்
தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் மகன் அருண் (வயது 18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வந்தார்..
இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் கவின் 14, சண்முக சேகர் மகன் ஹரிஷ் 17 ஆகிய 3பேரும் நேற்று மாலை 5.30 மணி அளவில் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி அருண்தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும் கவின், ஹரிஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக 3 பேரையும் வேன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 2பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







